பூபதி வாழ்வியல் பண்ணை – சுயசார்பை நோக்கிய நகர்வு
இருகூர் – பெருந்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் பூபதி, தனது இயற்கை விவசாய ஆர்வத்திற்காக ஃப்ளிப்கார்டில் செய்துவந்த வேலையை விட்டு விவசாயத்தில் முழுமையாக ஈடுபட்டார். தொழில்முறை புகைப்படக் கலைஞரான இவர், சில ஆண்டுகள் ஸ்டுடியோவும் நடத்தி வந்துள்ளார்.
இன்று முயல், லவ் பேர்ட்ஸ், நாட்டுக்கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட பல்வேறு கால்நடைகளுடன் ஒருங்கிணைந்த பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மேலும், தனது நிலத்தில் உணவுக் காடையும் (Food Forest) உருவாக்கி வருகிறார்.
இயற்கை முறையில் முயல்களை வளர்த்து, அவற்றை நேரடியாக உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறார். அதேபோல், 9 வகையான லவ் பேர்ட்ஸ் பறவைகளையும் வளர்த்து, அதன் மூலம் கூடுதல் மற்றும் நிலையான வருமானத்தையும் பெற்று வருகிறார்.
குடும்பத்தினரின் முழு ஆதரவுடன், இயற்கையோடும் நிலைத்தன்மையோடும் இணைந்த ஒரு தற்சார்பு பண்ணை சூழலை உருவாக்கி வருகிறார் பூபதி.
விவசாயம், இயற்கை மற்றும் கிராமிய வாழ்க்கையை நேசிக்கும் அனைவருக்கும் இந்தக் காணொலி நிச்சயம் ஒரு உத்வேகமாக இருக்கும். 🌱🐇🐓🐐🐄🦜
👍 வீடியோ பிடித்திருந்தால் Like | Share | Subscribe செய்ய மறக்காதீர்கள் 🔔 Bell Icon அழுத்தி எங்கள் சேனலை தொடர்ந்து பாருங்கள்!
🌿 நாம் என்ன செய்யலாம்?
🌱 இயற்கையை பாதுகாப்போம்
🌱 அதிகமாக மரங்கள் நடுவோம்
🌱 விவசாயிகளையும் பசுமை முயற்சிகளையும் ஆதரிப்போம்
👉 இப்படிப்பட்ட உண்மையான பசுமை கதைகளை தொடர்ந்து பார்க்க Pasumai Talks-ஐ பின்தொடருங்கள்.